இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும் - 2
குர்ஆனில்:
"மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் மகனோ) இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்றுவிட்டனர்". (5:75).
பைபிளில்:
"(இயேசு தனது சீடர்களிடம்) "யார் உங்களை (பிரச்சாரத்தை) ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் என்னை ஏற்றுக் கொண்டார். யார் என்னை ஏற்றுக் கொண்டாரோ அவர் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை) ஏற்றுக் கொண்டார்" என்று கூறினார். (மத்தேயு 40:10)
"இயேசு, தனது சீடர்களைப் பல பட்டினங்களுக்கும், பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, உங்களுக்கு செவி மடுப்ப்வர் யாரோ, அவர் எனக்குச் செவிமடுத்து (வழிபட்டு) விட்டார்; யார் உங்களை இழிவாக்கினானோ, அவன் என்னை இழிவாக்கிவிட்டான், எவன் என்னை இழிவாக்கினானோ, அவன் என்னைத் தூதராக அனுப்பியவனை (கடவுளை)யே இழிவாக்கிவிட்டான்" என்று கூறினார் (லூக்கா 16:10).
இதைத் தவிர லூக்கா(43:4), யோவான்(34:4, 3:17) போன்ற பல இடங்களில், தான் ஒரு தூதரேயென்றும், (கடவுளோ, கடவுளின் மகனோ அல்ல என்வும்) தனது இறைவனே தன்னைத் தூதராக அனுப்பினான் எனவும் தெளிவாகவே இயேசு பிரச்சாரம் செய்தார் என்பது விபரமாகக் கூறப்பட்டுள்ளது.
தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்
தொகுத்து வழங்கியது: மு.சாதிக்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment