Sunday, June 1, 2008

மக்கா நகரம் புதுப்பிக்கப் படுகிறது!








Tuesday, May 20, 2008

1953-ல் ஹஜ் பயணம் - நேஷனல் ஜியாக்ராபிக் புகைப்படங்கள்


1953-ல் நேஷனல் ஜியாக்ரபிக் பத்திரிக்கை வெளியிட்ட ஹஜ் பயண புகைப் படங்கள்:
1. விமானம் மூலம் வருகை தரும் ஹஜ் பயணிகள்!
2. கப்பல் மூலம் வருகை தரும் ஹஜ் பயணிகள்

3. மினா மைதானத்தில் கூடாரங்கள்
4. குடும்பத்தினருக்கு கடிதம் எழுதும் ஒரு ஹஜ் பயணி

5. பயணிகளுக்கான உணவு வகைகள் தயாராகிறது.



6. கடமைகள் முடிந்தபின் தலைமுடி மழிக்கும் ஒரு ஹஜ் பயணி.

7. ஷைத்தானுக்கு கல்லெறிதல்

8. குர்பானி ஆடுகள்


9. இறையில்லமான காபாவில் தொழுகை

10. இறையில்லம் காபா

11. காபாவை வலம் வரும் புனிதப் பயணிகள்

12. இறையில்லத்திற்கு வெளியிலும் தொழுகை

13. மக்கா நகர கடைவீதி

Friday, May 16, 2008

எதுவெல்லாம் தர்மம்?

  • நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?" எனக் கேட்டார். "நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) - நூல்: புஹாரி)

  • "பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புஹாரி)

  • "உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) / அபூ ஹுரைரா(ரலி) - நூல்: புஹாரி)

  • "தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், "(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்" என்று கூறினார்கள்.

மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்?" அல்லது "அதை அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது?)" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவட்டும்" என்றார்கள்.

மக்கள், "(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "அப்போது அவர் 'நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்" என்றார்கள்.

"(இதையும்) அவர் செய்யாவிட்டால்?" என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) - நூல்: புஹாரி)

Thursday, May 15, 2008

அண்டை வீட்டாரை தொந்தரவு செய்யாதீர்!

  • "அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.
    அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.
    அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்"
    என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்கப்பட்டது.

    அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்' என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் (ரலி) - நூல்: புஹாரி)


  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) - நூல்: புஹாரி)


  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்."

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) - நூல் - புஹாரி

இயேசு, மோசஸின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்!

இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும் - 5

மூஸா நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராகவும், அதனைப் பூரணப் படுத்துவற்காகவுமே இயேசு வந்தார்!.

குர்ஆனில்:

"மேலும், என்முன் இருக்கும் தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவனாகவும், உங்களுக்கு விலக்கப் பட்டவைகளில் சிலவற்றை, நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடனும் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, எனக்கும் கட்டுப்படுங்கள்". (3:50).

பைபிளில்:

"நாமூஸாயோ, அல்லது ஏனைய நபிமார்கள் கொண்டு வந்த(மார்க்கத்)தையோ செயலிழக்கச் செய்வதற்காக நான் வரவில்லை, மாறாக அதனைப் பூரணப்படுத்துவதற்காகவே நான் வந்தேன் என இயேசு கூறினார்" (மத்தேயு 17:5).

இதைத் தவிர இன்னும் பல இடங்களில் குர்ஆனிய உண்மைகள், பைபிளில் விபரிக்கப்பட்டுள்ளன.

எனவே, உண்மையைத் தேடுவோம், அதனை விளங்குவோம், அதனை ஏற்போம், அதன்பால் அழைப்போம்.

வல்ல இரட்சகன் நம்மனைவருக்கும் நேரான வழிகாட்டுவானாக!

தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்
தொகுத்து வழங்கியது: மு.சாதிக்

இயேசு, கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்றே பிரச்சாரம் செய்தார்

இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும் - 4

இயேசு, கடவுளை மட்டுமே வணங்கவேண்டும், அவனுக்கு யாரையும், எதனையும் இணையாக்கக் கூடாது என்றே பிரச்சாரம் செய்தார்

குர்ஆனில்:

(இயேசு) 'நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழியாகும் (என்று கூறினார்)'. (3:51)

பைபிளில்:

"உனது கடவுளுக்கு மட்டுமே சிரம்தாழ்த்தி அவனை மட்டுமே நீ வணங்கு" என்று, இயேசு மக்களுக்குக் கட்டளையிட்டார் (மத்தேயு 10:4)

கடமைகளிலும், உபதேசங்களிலும் முதன்மையானது எதுவென இயேசுவிடம் கேட்கப்பட்டபோது "இஸ்ரவேலர்களே! கேளுங்கள்!! உபதேசங்களிலெல்லாம் மிக முதன்மையானது, இரட்சகனான எமது கடவுள், ஒரே ஒருவன்தான் என்பதும், உனது இரட்சகனாகிய உனது கடவுளை முழுமையாக நேசிப்பதுவுமாகும்" என பதிலளித்தார். (முர்குஸ் 29:12).

தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்
தொகுத்து வழங்கியது: மு.சாதிக்

இயேசு, இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராகும்!

இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும் - 3

குர்ஆனில்:

"இஸ்ரவேல் மக்களுக்கே (அவரை) ஒரு தூதராக (அனுப்பினோம்)..."(3:49).

பைபிளில்:

ஒரு தடவை கன்ஆன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இயேசுவிடம் வந்து, தனது பைத்தியம் பிடித்த மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியபோது, "நான் வழிகெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை (மட்டுமே) நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்" என்று இயேசு கூறிவிட்டார். (மத்தேயு 24:15)

இயேசு தனது சீடர்களை, யூத பட்டினங்களுக்கு பிரச்சாரத்திற்காக அனுப்பியபோது, "சாமிரிய்யீங்களின் பட்டினத்தினுள்ளோ, வேறு சமூகங்களின் பட்டினத்தினுள்ளோ நீங்கள் போகாதீர்கள், வழி கெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை சீர்செய்வதற்காக சுதந்திரமாக நீங்கள் செல்லுங்கள்" என்று சொன்னார். (மத்தேயு 5:10)

இதிலிருந்து பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே இயேசு தூதர் என்பதையும், ஏனையோருக்கு அவர் தூதராக அனுப்பப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்
தொகுத்து வழங்கியது: மு.சாதிக்